www.garudabazaar.com

இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த செப்டம்பர் இரண்டாவது வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் படங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

This week September OTT Release Movies Full list

Also Read | 'பிரம்மாஸ்திரா' படத்தின் ரிலீஸ்.. நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ஆலியா பட் போட்டோஷூட்!

சீதா ராமம்

தெலுங்கின் முன்னணி இயக்குனரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான  வேடத்தில் நடித்துள்ளார்.

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த 'சீதா ராமம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு,  தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

This week September OTT Release Movies Full list

இந்த படம்,  ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக இருக்கிறது.

விருமன்

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்’ படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார்.

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண்  மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

This week September OTT Release Movies Full list

விருமன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பினோச்சியோ

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் ராபர்ட் ஜெமெக்கிஸ் இயக்கிய பினோச்சியோ என்ற அமெரிக்க  ஃபேன்டஸி மியூசிக்கல் திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்

நாளை செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் வெளியாக உள்ளது. ஆக்சன் த்ரில்லர் வகைமையில் உருவான இப்படத்தில் அர்ஜூன் கபூர், திஷா பதானி, ஜான் ஆபிரகாம், கரிஷ்மா ஷர்மா, தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர். ‌அசீம் அரோரா இப்படத்தை இயக்கியுள்ளார்.

This week September OTT Release Movies Full list

இந்த படங்களோடு மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களும் வெளியாகின்றன.

Paappan (Zee5),

சுரேஷ் கோபி போலீசாக நடித்த இப்படம் ஜி5 தளத்தில் வெளியாகி உள்ளது. ஆப்ரஹாம் மேத்யூ மதன் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக சுரேஷ் கோபி நடித்துள்ளார். ஜோஷி இப்படத்தை இயக்கியுள்ளார்.

Thallumala (Netflix)

டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த இப்படத்தை கலித் ரஹ்மான் இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 11 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அவல நகைச்சுவை வகைமையில் இந்த படம் அமைந்துள்ளது.

This week September OTT Release Movies Full list

Nna Thaan Case Kodu

குஞ்சாக்கோ & காயத்ரி நடித்த 'நா தான் கேஸ் கொடு' படம் ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியானது. நய்யாண்டி வகைமையில் இந்த படம் அமைந்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் இன்று முதல் வெளியாகி.

Also Read | Ponniyin Selvan PS1 படத்துல ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை.‌. இவங்களா? செம தகவல்

This week September OTT Release Movies Full list

People looking for online information on OTT Release Movie, September OTT Release Movies will find this news story useful.