LIGER D Logo Top
www.garudabazaar.com

ஆகஸ்ட் கடைசி வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆகஸ்ட் கடைசி வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் படங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

August Last week OTT Release Movies List

Also Read | BOX OFFICE: 100 கோடி வசூலை நெருங்கும் துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்'.. மொத்த வசூல் நிலவரம்!

ஜோதி

குழந்தைகள் கடத்தல் சம்பவம், கிராம- நகர்ப்புறங்களில் கண்ணுக்கு தெரியாத அளவில் போகிற போக்கில் நடக்கும் மருத்துவ மாஃபியா ஆகியவற்றுக்கு எதிரான ஒரு கர்ப்பிணி பெண்ணின் அறச்சீற்றமே, சஸ்பென்ஸ் கொடுக்கும் காட்சிகளால் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ஜோதி’ திரைப்படம்.

வெற்றி,  ஷீலா ராஜ்குமார் (அருள் ஜோதியாக), கிரிஷா குரூப்,  இளங்கோ குமரவேல், மைம் கோபி , நான் சரவணன், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் நடித்த இந்த திரைப்படத்தை AV கிருஷ்ண பரமாத்மா இயக்க, SP ராஜா சேதுபதி தயாரித்துள்ளார்.

August Last week OTT Release Movies List

செசி ஜெயா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். சத்ய மூர்த்தி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.  ஜோதி திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த வாரம் டெண்ட்கொட்டா ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.

குளுகுளு

August Last week OTT Release Movies List

சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் "குலு குலு"  திரைப்படம் உருவானது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் OTT உரிமத்தை சன் நெட்வொர்க்கின் சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன்படி இந்த வாரம் சன் நெக்ஸ்ட் தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்த படங்களோடு

August Last week OTT Release Movies List

ரிப்பீட் (தெலுங்கு) - டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி உள்ளது.

பேட்டரி (தமிழ்) - Simply South தளத்தில் வெளியாகி உள்ளது.

டெல்லி கிரைம் சீசன் 2 (இந்தி) - நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மகாராணி சீசன் 2 (இந்தி) - சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது.

August Last week OTT Release Movies List

Also Read | "பொன்னியின் செல்வன்" படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! மாஸ்

August Last week OTT Release Movies List

People looking for online information on August Month OTT Release Movie, OTT Release Movie will find this news story useful.