Maha
www.garudabazaar.com

இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

This week July 4th week OTT Release Movies Web series Netflix Sony LIV Voot

Also Read | KGF Chapter 2 படத்தின் 100 வது நாள்.. உருக்கமான கிளைமாக்ஸ் காட்சியை வெளியிட்ட படக்குழு! வைரல் வீடியோ

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீம் பாய்ஸ் (தமிழ்) வெப்-சீரிஸ்

இயங்குதளம் : சோனி லிவ்

வெளியீட்டு தேதி: ஜூலை 22

மீம் பாய்ஸ் எனும் தமிழ் வலைத் தொடர், நான்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களது நண்பர்களைச் சுற்றி நடக்கும் கதை ஆகும்.  ராஜீவ் ராஜாராம் மற்றும் த்ரிஷ்யா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆதித்ய பாஸ்கர், நம்ரதா, ஜெயந்த், தேவதர்ஷினி.பி, சித்தார்த் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

This week July 4th week OTT Release Movies Web series Netflix Sony LIV Voot

777 சார்லி

இயங்குதளம் : வூட் (Voot)

வெளியீட்டு தேதி: ஜூலை 29

நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கு கன்னட திரைப்படம் ‘777 சார்லி’. இந்த படம், தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில்  நாயகனாக நடித்துள்ள ரஷித் செட்டி தான் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்.

கதையின் நாயகன் தர்மா. அவனுடைய சிறு வயதில் அம்மா,அப்பா,தங்கை ஆகிய மூவரும் ஒரு கார் விபத்தில் இறந்து விடுகின்றனர். அந்த வயதில் அவனுக்கு ஏற்பட்ட இந்த பேரிழப்பால் தர்மா தனிமை விரும்பியாக வளர்கிறான். அவனின் ஒரே துணை எந்நேரமும் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சார்லி சாப்ளின் திரைப்படங்கள் மட்டும் தான்.

அவனுடைய உணவு என்பது மதியம் கேண்டின் சாப்பாடு & இரவில் மூன்றே இட்லி. அந்த முன்று இட்லியிலும் ஒரு இட்லி மிச்சமாகி குப்பைத் தொட்டியில் வந்து விழும். நாய் ஒன்று அவன் வீட்டு எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் இந்த இட்லியை உண்ண காத்துக் கொண்டிருக்கும். இரண்டு இட்லி அவனுக்கு ஒரு இட்லி நாய்க்கு.  ஒரு நாள் அடாத மழையில் அந்தநாய் அவன் வீட்டிற்குள் தஞ்சம் அடைய முயன்ற பொழுது, விரட்டி விடுகிறான் தர்மா. நாயை விரட்டியடித்த தர்மாவும் விரட்டப்பட்ட நாயும் பின்னாளில் நண்பர்களாக திரிவது தான் 777 சார்லியின் கதை.

இந்த படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிரண் ராஜ் இயக்கியிருக்கும் இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

பரம்பரை சீசன் -2

இயங்குதளம் - டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ரிலீஸ் தேதி - 21.07.2022

டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் தமிழில் நடிகர்கள் ஜெகபதி பாபு, சரத்குமார், நவீனா சந்திரா மற்றும் பலர் நடித்து 7 எபிசோடுகள் கொண்ட வலைத் தொடராக ஸ்ட்ரீம் ஆனது பரம்பரா தொடரின் முதலாவது சீசன்.  "பரம்பரை சீசன் 2" நாயுடு மற்றும் கோபி இடையேயான போரின் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் திருப்பங்களுடன் பரபரப்பானது. இதில் நவீன் சந்திரா, நடிகை ஆகன்ஷா சிங், இஷான், நைனா கங்குலி மற்றும் முரளி மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

This week July 4th week OTT Release Movies Web series Netflix Sony LIV Voot

தி கிரே மேன்

OTT இயங்குதளம்: நெட்ஃபிக்ஸ்

வெளியீட்டு தேதி - 22 ஜூலை 2022

ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், தனுஷ் மற்றும் பலர் நடித்துள்ள தி கிரே மேன், ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் தனுஷின் முதல் ஹாலிவுட்  திரைப்படமாகும், ரூஸ்ஸோ பிரதர்ஸால் இயக்கப்பட்டது.

This week July 4th week OTT Release Movies Web series Netflix Sony LIV Voot

Also Read | இன்னும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் 'விக்ரம்'.. செமயான கமல் லுக்கில் 50 வது நாள் போஸ்டர்!

This week July 4th week OTT Release Movies Web series Netflix Sony LIV Voot

People looking for online information on July 4th week OTT Release Movies, OTT Release Movie, Web Series will find this news story useful.