www.garudabazaar.com

'பிரம்மாஸ்திரா' படத்தின் ரிலீஸ்.. நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ஆலியா பட் போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட்  கர்ப்பத்துடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Alia Bhatt Photoshoot with Baby Bump for Brahmastra Movie

Also Read | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் அடுத்த அப்டேட்.. போட்டோவுடன் GVM கொடுத்த சர்ப்ரைஸ்!

ஆலியா பட், பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

Actress Alia Bhatt Photoshoot with Baby Bump for Brahmastra Movie

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டில் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் இந்த படம் உலகம் அறியச் செய்தது.

Actress Alia Bhatt Photoshoot with Baby Bump for Brahmastra Movie

சமீபத்தில் RRR படத்திலும், டார்லிங் படத்திலும் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார். நாளை செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியாகிறது.

Actress Alia Bhatt Photoshoot with Baby Bump for Brahmastra Movie

இந்நிலையில் நடிகை ஆலியா பட்  கர்ப்பத்துடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸை ஒட்டி இந்த போட்டோ ஷூட்டை ஆலியா பட் நடத்தி உள்ளார். மாடிப்படியில் நின்றபடி ஜீன்ஸ் மற்றும் கோட் அணிந்து ஆலியா பட் போட்டோஷூட் போட்டோக்களில் காட்சியளிக்கிறார்.

Actress Alia Bhatt Photoshoot with Baby Bump for Brahmastra Movie

நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ஆலியா பட் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | VIKRAM VEDHA: ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகானின் மாஸ் ஆக்சன் காட்சிகள்.. வெளியான சூப்பர் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Alia Bhatt Photoshoot with Baby Bump for Brahmastra Movie

People looking for online information on Alia Bhatt, Alia Bhatt photoshoot with baby bump, Brahmastra will find this news story useful.