www.garudabazaar.com

இந்த ஜூலை 2வது வாரம் OTT-யில் ரிலீசாகும் சூப்பர் திரைப்படங்கள்! எப்போ? எதுல? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஜூலை இரண்டாம் வாரம் ஒடிடி-யில் வெளியாகும் படங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

This July Second Week OTT Release Movies Amazon Prime Netflix Hotstar

Also Read | குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.. வைரல் போட்டோ!

'மாடர்ன் லவ் ஹைதராபாத்'

மாடர் லவ் மும்பை ஆந்தாலஜிக்கு பிறகு, மாடர்ன் லவ்வின் ஹைதராபாத் ஆந்தாலஜி ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆறு வித்தியாசமான உறவுகளின் கதையையும், நவீன உறவில் காதல், வளர்ச்சி, மீள்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவற்றை கதைமாந்தர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் இந்த தொடர் வெளிப்படுத்துகிறது.

இந்த தொடரில் ஆதி பினிசெட்டி, நித்யா மேனன், ரிது வர்மா, சுஹாசினி மணிரத்னம், நரேஷ் மற்றும் கோமலி பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Amazon Prime Video வீடியோவில் இன்று ஜூலை 8 ஆம் தேதி முதல் ரிலீசாக உள்ளது.

This July Second Week OTT Release Movies Amazon Prime Netflix Hotstar

'அடடே சுந்தரா'

புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கரின் தயாரிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்க, நேச்சுரல் ஸ்டார் நானியின் ரோம்-காம் என்டர்டெய்னர் "அண்டே சுந்தரனிகி" திரைப்படம் தெலுங்கில் உருவானது.

ஜூன் 10ஆம் தேதி மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தின் மலையாளப் பதிப்பிற்கு "ஆஹா சுந்தரா" எனவும்,  தமிழ்ப் பதிப்பிற்கு "அடடே சுந்தரா" எனவும் பெயர் வைக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை இப்படம் பெற்றது.

இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார். லீலா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா கிறித்தவ பெண்ணாக நடித்துள்ளார்.

இந்த படம் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விக்ரம்'

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

This July Second Week OTT Release Movies Amazon Prime Netflix Hotstar

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் 'விக்ரம்' படம் Simply South ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஹர்டாங் (Hurdang)

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கும் ஆர்வமுள்ள ஐஏஎஸ்ஸைப் பற்றி நிகில் பட் எழுதி இயக்கியிருக்கும் இப்படம் 1990-களின் பின்னணியில் உருவாகி உள்ளது. ஜாதி அரசியலை அடிப்படையாக கொண்ட படம் என்றாலும் காதலையும் கருவாகக் கொண்டுள்ளது. இப்படத்தில் சன்னி கௌஷல், நுஷ்ரத் பருச்சா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 10ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

Also Read | PHOTOS: கமலுக்கு அம்பேத்கர் - பெரியார் சிலைகளை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்..! பின்னணி தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

This July Second Week OTT Release Movies Amazon Prime Netflix Hotstar

People looking for online information on Adade Sundara, Amazon Prime, Hotstar, Netflix, OTT Release Movie, Vikram will find this news story useful.