Rocketry
www.garudabazaar.com

இந்த ஜூலை முதல் வாரம்.. OTT-யில் வெளியாகும் சூப்பர் திரைப்படங்கள்.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஜூலை முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள்.

This July first week OTT Release Movies Web series Netflix Amazon prime

Also Read | புதிய படத்தின் ரிலீஸ்.. நடிகை ராஸி கண்ணா HOT போட்டோஷூட்! வைரல் ஃபோட்டோஸ்

சாம்ராட் பிரித்விராஜ்

அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சாம்ராட் பிரித்விராஜ்’ திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் மன்னன் சாம்ராட் பிருத்விராஜ் வேடத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தார்.

ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸான நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

This July first week OTT Release Movies Web series Netflix Amazon prime

இந்த படத்துடன் அமேசான் பிரைம் தளத்தில் பாய்ஸ் வெப் சீரிஸின் மூன்றாவது சீசனின் 7வது எபிசோட் வெளியாகி உள்ளது. மேலும் டெர்மினல் லிஸ்ட் சீசன் 1 அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.

விராத பர்வம்

விராத பர்வம் ஜூன்17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடிக்கிறார். விராத பர்வம் போரின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதையை விவரித்தது.

இன்று ஜூலை 1 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

This July first week OTT Release Movies Web series Netflix Amazon prime

இந்த படத்துடன் Stranger Things - யும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழியில் வெளியாகி உள்ளது.

அதே போல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெனோம், அமேசிங் ஸ்பைடர் மேன், ஹோம் கம்மிங் & ஸ்பைடர் மேன் ஒரிஜினல் டிரைலஜி வெளியாகி உள்ளது.

ஜி 5 தளத்தில் கங்கனா ரனாவத் நடித்த தாகட் படமும் வெளியாகி உள்ளது.

Also Read | பட ரிலீஸை ஒட்டி போட்டோ ஷூட் நடத்திய அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் லுக்!

This July first week OTT Release Movies Web series Netflix Amazon prime

People looking for online information on OTT Rlease Movie, Web Series will find this news story useful.