www.garudabazaar.com

இந்த ஜூலை கடைசி வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஜூலை கடைசி வாரம் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மற்றும் தமிழ் OTT இயங்குதளங்களில் பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

This week OTT Release Movies Amazon Prime Disney plus Hotstar

Also Read | பிரான்ஸ் டூர் முடிஞ்சது.. அடுத்து இந்த நாடு தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட VIDEO!

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் - உளவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்.

இப்படத்தை மாதவன் இயக்கி நடித்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

This week OTT Release Movies Amazon Prime Disney plus Hotstar

தி பேட்மேன்

ராபர்ட் பாட்டின்சன் நடித்த சூப்பர் ஹீரோ திரைப்படமான தி பேட்மேன் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூலை 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. மாட் ரீவ்ஸ் எழுதி இயக்கியுள்ளார். டி சி காமிக்ஸின் மிக முக்கிய சமீபத்திய திரைப்படம் இது. இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.

777 சார்லி

ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள 777 சார்லி திரைப்படம் இன்று முதல் (ஜூலை 29 ஆம் தேதி) Voot Select இல் திரையிடப்பட உள்ளது.வூட் செலக்ட் – கன்னடம் – ஜூலை 29 கிரண்ராஜ் கே எழுதி இயக்கிய இந்த படத்தை பரம்வா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

This week OTT Release Movies Amazon Prime Disney plus Hotstar

19 (1)(a)

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 19 (1)(அ)- திரைப்படம் நேரடியாக ஒடிடியில் வெளியாகி உள்ளது,  ஜூலை 29 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்த படம் திரையிடப்படும்.

குட் லக் ஜெர்ரி

ஜான்வி கபூர் நடித்துள்ள குட் லக் ஜெர்ரி திரைப்படம் இன்று ஜூலை 29 ஆம் தேதி OTT தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இது 2018 இல் வெளியான தமிழ் படம் கோலமாவு கோகிலாவின் ரீமேக் ஆகும்.

This week OTT Release Movies Amazon Prime Disney plus Hotstar

Also Read | அடடே..தனுஷ் நடிக்கும் 'வாத்தி'‌பட ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல இந்திய நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

This week OTT Release Movies Amazon Prime Disney plus Hotstar

People looking for online information on Amazon Prime, Disney Plus Hotstar, OTT Release Movie will find this news story useful.