www.garudabazaar.com

Ponniyin Selvan PS1 படத்துல ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை.‌. இவங்களா? செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பிரபல நடிகை டப்பிங் பேசியுள்ளது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Deepa Venkat Dubbed for Aishwarya Rai Bachchan in Ponniyin Selvan PS1

Also Read | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் அடுத்த அப்டேட்.. போட்டோவுடன் GVM கொடுத்த சர்ப்ரைஸ்!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர்,  பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

Deepa Venkat Dubbed for Aishwarya Rai Bachchan in Ponniyin Selvan PS1

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Deepa Venkat Dubbed for Aishwarya Rai Bachchan in Ponniyin Selvan PS1

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இதில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு பிரபல நடிகை தீபா வெங்கட் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தீபா வெங்கட் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "இதைப் பற்றி நான் என்ன சொல்வது? கிரசென்ட் அவென்யூ சென்று மெட்ராஸ் டாக்கீஸ் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால் வீட்டுக்குப் போவது போல் இருக்கிறது. அலுவலகத்தில் உள்ள டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்களுடன் அன்பான, நட்பு முகங்கள் மற்றும் வேடிக்கையான அரட்டைகள்.

நீங்கள் டப் தொகுப்பில் நுழையும்போது உங்களுக்கு என்ன சவால்கள் காத்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் இந்த ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்போது, மிகுந்த மனநிறைவுடன், நிறைவான உணர்வோடு வெளியேறுவேன்.

கன்னத்தில் முத்தமிட்டால், குரு, செழியா (காற்று வெளியிடையின் தெலுங்கு பதிப்பு), செக்க சிவந்த வானம் (தமிழ் மற்றும் தெலுங்கு) மற்றும் இப்போது, பிஎஸ்-1 போன்ற படங்களில் ஒரு பகுதியாக இருப்பது நான் நினைப்பதை விட பல வழிகளில் என்னை வளப்படுத்தியுள்ளது.

மயக்கும் மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது எனது முதல் படம்.

Deepa Venkat Dubbed for Aishwarya Rai Bachchan in Ponniyin Selvan PS1

ஐஸ்வர்யா ராய் பற்றி நான் இன்னும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அது ஒரு தனி இடுகையாக இருக்க வேண்டும். பின்னர் :))

மணி சார், இதற்கு என்னால் ஒரு போதும் நன்றி சொல்ல முடியாது🙏🙏🙏 அனைவரின் அன்புக்கும் நன்றி." என தீபா வெங்கட் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | 'பிரம்மாஸ்திரா' படத்தின் ரிலீஸ்.. நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ஆலியா பட் போட்டோஷூட்!

தொடர்புடைய இணைப்புகள்

Deepa Venkat Dubbed for Aishwarya Rai Bachchan in Ponniyin Selvan PS1

People looking for online information on Aishwarya Rai Bachchan, Deepa Venkat, Maniratnam, Ponniyin Selvan part 1 will find this news story useful.