இந்த மே மாதத்தின் கடைசி வார OTT ரிலீஸ் படங்கள் லிஸ்ட்.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

This May Month Last Week OTT Release Movies List

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த மே கடைசி வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KGF: Chapter 2 - Amazon Prime

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான KGF: 2, இன்று மே 27 முதல் Amazon Prime இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது. ஏப்ரல் மாதம் 14 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் யாஷுடன், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

This May Month Last Week OTT Release Movies List

Heropanti 2: Amazon Prime

இப்படம் ஏப்ரல் 2022 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அகமது கான் இயக்கி, சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படம், டைகர் ஷெராஃப் முக்கிய வேடத்தில் நடித்த 2014 ஆம் ஆண்டு வெளியான படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று மே 27ஆம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாகி உள்ளது.

Attack – Zee 5

ஜான் ஆபிரகாமின் அட்டாக் படம், இன்று மே 27 அன்று ஜீ 5 இல் வெளியிடப்படுகிறது. இந்த திரைப்படத்தை லக்ஷ்ய ராஜ் ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

This May Month Last Week OTT Release Movies List

சேத்துமான் - சோனி லைவ்

நீலம் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாக ‘சேத்துமான்’ என்கிற திரைப்படத்தை திரைக்கதை எழுதி தமிழ் என்ற அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கான கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிந்து மாலினி இசையமைத்துள்ளார். சி எஸ் பிரேம்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் (இன்று) மே 27 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

This May Month Last Week OTT Release Movies List

போத்தனூர் தபால் நிலையம் - ஆஹா தமிழ்

இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மே 27, 2022 முதல் ஆஹா தமிழில் ஓடிடி உலகளாவிய நேரடி வெளியீடாக “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படம்  வெளியாகிறது. Passion Studios ஏற்கனவே சீதக்காதி, அந்தகாரம், என்னாங்க சார் உங்க சட்டம் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

This May Month Last Week OTT Release Movies List

People looking for online information on Amazon Prime, OTT, Rakul Preet Singh, Sony LIV, Zee5 will find this news story useful.