www.garudabazaar.com

The Legend : ஓடிடியில் ரிலீஸாகும் தி லெஜண்ட் திரைப்படம்... வெளியான அறிவிப்பு!! போடு ரகிட.. ரகிட..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'தி லெஜண்ட்'. முன்னதாக நிறைய விளம்பரங்களில் தோன்றி மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்த லெஜண்ட் சரவணன், 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கி இருந்தார்.

The Legend movie to stream in disney + hotstar ott official

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Yogi Babu : யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஐகோர்ட் மகாராஜா..!! இயக்குநர் யார் பாருங்க..

கடந்த ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்', தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என  கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியானது ‘தி லெஜண்ட்’. இந்த படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாயை திரையரங்க டிக்கெட் விற்பனை மூலம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தி லெஜண்ட்

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

The Legend movie to stream in disney + hotstar ott official

Images are subject to © copyright to their respective owners.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் படத்தொகுப்பை கையாண்டார். கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட் ஆகின.

ஒரு  எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்கும் வகையில் தி லெஜண்ட் திரைப்படம் உருவாகியிருந்தது.

The Legend movie to stream in disney + hotstar ott official

Images are subject to © copyright to their respective owners.

ஓடிடி ரிலீஸ் தேதி

தி லெஜண்ட் திரைப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய சூழலில், அடுத்து ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இது பற்றி லெஜண்ட் சரவணன் கூட விரைவில் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வரும் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 03.03.2023 முதல் ஸ்ட்ரீம் ஆகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் நாளை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சூழலில் தற்போது இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அனைவரும் மிகுந்த உற்சாகத்திலும் உள்ளனர்.

Also Read | குடும்பத்தை ரெண்டாக்கிய அர்ஜூன்.. கொந்தளித்த கோதை.. எச்சரித்து வெளியேறிய தமிழ்.. Thamizhum Saraswathiyum

தொடர்புடைய இணைப்புகள்

The Legend movie to stream in disney + hotstar ott official

People looking for online information on Disney hotstar, The legend, The Legend OTT Release will find this news story useful.