Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

"மக்களுக்காக என் வீடு திறந்தே இருக்கும்"... Legend சரவணன் வீட்டில் திரண்ட பொதுமக்கள்.! மாஸ் ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக முறையில் தயாரித்த திரைப்படம் தி லெஜண்ட்.. தி லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் ஓடியது.

poeple in actor The Legend House Vijayadasami Trending

இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

ஒரு  எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து அனைத்து தரப்பினரும் ரசித்து  பார்க்கும் வகையில்  இப்படம் உருவாகியிருந்தது. இதன் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றார்.

அதன்படி தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை வெளியிட்டார்கள். எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் இப்படம் 5 மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் தம் சொந்த ஊரில், விஜய தசமி கொண்டாடியதுடன், சுவாமி தரிசனம் நடக்கும் வீடியோக்களை பதிவிட்டுள்ளதுடன், சொந்த ஊரில் 24 மணி நேரமும், 7 நாட்களும் அன்னதானம் நடக்கும் தகவலையும் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான தமது ட்விட்டர் பதிவில், “என்மீது  அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும்  திறந்து இருக்கும்…” என்று லெஜண்ட் சரவணன் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் பலரும் லெஜண்ட் சரவணனின் வீட்டிற்கு சென்று விசேஷத்தில் கலந்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இதனிடையே லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

poeple in actor The Legend House Vijayadasami Trending

People looking for online information on Legend Saravanan, The legend, Vijayadasami will find this news story useful.