Battery
www.garudabazaar.com

The Legend ரிலீஸ் அன்று Chess Olympiad தொடக்க விழா.. 4 மாவட்டத்துக்கு Leave-ஆ..? குஷியில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லெஜண்ட் சரவணன் நடிப்பில், நாளை (28.07.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'.

4 TN districts leave due to chess olympiad in the legend release

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அனல் அரசு இந்த படத்துக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளனர்.

ஊர்வசி ரவுத்தலா, ராய் லக்‌ஷ்மி, யாஷிகா ஆனந்த், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, ‘மறைந்த நடிகர்’ விவேக், யோகிபாபு மற்றும் பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

'தி லெஜண்ட்' படத்தின் டிரைலர், பாடல்கள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. மேலும், விளம்பர படங்களில் அடிக்கடி கவனித்து வந்த லெஜண்ட் சரவணனை ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ் உள்ளிட்டவற்றுடன் திரைப்படங்களில் கலக்குவதை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், தி லெஜண்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாளில் உள்ள சுவாரஸ்யம் தொடர்பான செய்தி ஒன்றை ரசிகர்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். தி லெஜண்ட் படம் ரிலீஸ் ஆகும் நாளான ஜூலை 28 ஆம் தேதியன்று, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.

இதற்கு காரணம், சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில், நாளை முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதற்கான தொடக்க விழாவின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28 ஆம் தேதி, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.

அப்படி ஒரு தினத்தில், தி லெஜண்ட் திரைப்படமும் ரிலீஸ் ஆவதால், படத்தை பார்க்க நாளை பலருக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

4 TN districts leave due to chess olympiad in the legend release

People looking for online information on Harris Jayaraj, Legend Saravanan, The legend, Urvashi Rautela, Vivekh will find this news story useful.