Battery
The Legend
www.garudabazaar.com

சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக   பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

The Legend Movie Censored UA Running Time 2 Hours 41 Minutes

Also Read | தமிழ், தெலுங்கில் தனுஷ் நடிக்கும் "வாத்தி" திரைப்படம்.. ரிலீஸ் எப்போ? அசத்தல் அப்டேட்

'தி லெஜண்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

உலகெங்கும் நாளை ஜூலை 28 அன்று வெளியாகும் 'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றுள்ளார். தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிடுகிறார்.

எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

The Legend Movie Censored UA Running Time 2 Hours 41 Minutes

இந்நிலையில் இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு  எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து அனைத்து தரப்பினரும் ரசித்து  பார்க்கும் வகையில்  இப்படம் உருவாகி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The Legend Movie Censored UA Running Time 2 Hours 41 Minutes

சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.

தனிப் பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இது. யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் நடித்துள்ளார்.

The Legend Movie Censored UA Running Time 2 Hours 41 Minutes

விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார், ரூபன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை திறம்பட மேற்கொண்டனர், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்.

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. வெளியான CLASS-ஆன ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

The Legend Movie Censored UA Running Time 2 Hours 41 Minutes

People looking for online information on தி லெஜண்ட், Saravanan The Legend Movie, The Legend movie, The Legend Movie Updates will find this news story useful.