Yogi Babu : யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஐகோர்ட் மகாராஜா..!! இயக்குநர் யார் பாருங்க..
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை : யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் " ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.. பிரபல நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஆரம்ப கால பயணம்
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். ஆரம்பத்தில் சிறிய சிறிய நகைச்சுவை வேடங்களில் பல திரைப்படங்களில் தலைகாட்டிய யோகி பாபு, கலகலப்பு திரைப்படத்தில் இன்னும் பிரபலமானார். சுந்தர் சி இயக்கத்தில் விமல் மற்றும் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் யோகி பாபுவை பலரும் அடையாளம் கண்டு கொண்டனர்.
குவிந்த வாய்ப்பு
இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக யோகி பாபு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தன. ஓரிரு வசனங்களை பேசினாலும் தனக்கே உரிய உடல் மொழியில் நக்கல் நையாண்டி கலந்த கலகலப்பான பாணியில் யோகி பாபு பேசுவது அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.
நாயகனாக..
இதே பாணியில் சென்ற யோகி பாபு சிறிய பட்ஜெட் படங்களில் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்களுடன் கூடிய நாயகன் கேரக்டரிலும் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் கூர்கா, தர்ம பிரபு, பேய் மாமா, மண்டேலா, சமீபத்தில் பொம்மை நாயகி என யோகி பாபு நாயகனாகவே நடித்த திரைப்படங்கள் பலவும் பல விதமாக அமைந்தன. அவற்றில் சில படங்கள் அழுத்தமான மற்றும் சீரியஸான கதைக்களத்துடனும் அமைந்தன.
பெரிய ஹீரோ படங்களில் காமெடியன்
அதேசமயம் ஒருபுறம் நாயகனாக கலக்கி வரும் யோகி பாபு, இன்னொரு புறம் அஜித், விஜய் என பெரும் மாஸ் நடிகர்களின் திரைப்படங்களிலும் தலைகாட்டினார். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
ஐகோர்ட் மகாராஜா
இந்நிலையில் தான் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் "ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார். ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக " தயாரிக்கும் படம் " ஐகோர்ட் மகாராஜா " இந்த படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார். மற்றும் மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில் FIRST LOOK POSTER ஐ வருகிற ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.
தொழில்நுட்பக்கலைஞர்கள் விபரம்
ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜு.
இசை - சாண்டி
பாடல்கள் - சந்துரு
எடிட்டிங் - சங்கதமிழன்
கலை இயக்குனர் - ஸ்ரீமன் ராகவன்
ஸ்டண்ட் - மெட்ரோ மகேஷ்
நிர்வாக தயாரிப்பு - செல்வகுமார்
தயாரிப்பு மேற்பர்வை - முருகபூபதி
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு - ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட்
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குக்கிறார் - எ.பாக்கியராஜ். DFT
Also Read | 500 வருட பழமையான முருகன் கோயிலில் பிரபல இயக்குனருடன் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம்.. PHOTOS
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Yogi Babu Joined In Sabarimala Sannidhanam PO Movie Shoot
- Yogi Babu Praying Kanniyakumari Mandaikaadu Temple
- RJ Balaji Next Movie Sorga Vaasal Karunaas And Yogi Babu Deets
- Chimbu Deven Next Movie Yogi Babu And Gouri Kishan In Lead Deets
- Actor Yogi Babu Went To Murugan Temple At Nagappattinam
- Actor Yogi Babu Shares Drawing Of Himself And Vijay Goes Viral
- Trisha Sivakarthikeyan Yogi Babu Visited Temples
- Actor Yogi Babu Latest Pic With Dhoni Signed Bat In Hands Viral
- Actor Yogi Babu Playing Cricket With Vijay Gifted Bat
- Yogi Babu Starring New Film Titled Lucky Man
- Yogi Babu Share Bts Video In Varisu Shoot Vijay And Vivek
- Yogi Babu Visit Thiruthani Murugan Temple And Took Photos With Fans
தொடர்புடைய இணைப்புகள்
- Moonwalk - Photos
- Moonwalk - Videos
- 'Yogi Babu இங்கே ஆ காட்டுங்க பாசமா ஊட்டிவிட்ட Dhoni ❤️' #shorts #yogibabu #msdhoni #behindwoodsnews
- Yogi Babu As LEO🦁Live Acting On Stage🔥 Lokesh & Trisha's Reactions🤣 Bloody Sweet😍
- "Yogi Babu, நம்ம ஒரு படம் பண்ணலாமா"? 😱 மேடையில் Shock குடுத்த GVM Speech
- Yogibabu-"Ajith Sir Uhh Vijay Sir Aaah பத்தி கேட்பாரு 🥰" #shorts #shortsvideos
- சர்கார் SHOOTING -லே AJITH SIR Aah பத்தி தளபதி கேட்பாரு 😍#shorts #shortsvideos
- சிம்பு -விற்கு GP MUTHU எழுதிய கடிதம் 😎|அப்பிடி என்ன எழுதிருப்பாரு 😱
- THALA AJITH -இக்கு GP MUTHU எழுதிய கடிதம் 😎| விஸ்வாசம் படம் பார்த்து அழுதேன் 😣
- பணத்து ஆசைப்பட்டு பண்றேன்னு.. சும்மா இருந்த என்ன Yogi Babu தங்கச்சினு Famous ஆக்கிட்டாங்க🤣 Interview
- நடிகர் யோகிபாபு ட்வீட் | - Slideshow
- 'Ajith, Vijay உடன் கோர்த்து விட்ட Anchor'.. கையெடுத்து கும்பிட்ட யோகி பாபு! கல கல பேச்சு | Yogi Babu







