www.garudabazaar.com

Actress Laila: “நான் நடித்த படங்களிலேயே என் ஃபேவரைட் இதுதான்”.. வைரலாகும் நடிகை லைலாவின் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை லைலாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Actress Laila Post About Manju Character in Pithamagan Movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read |கௌதம் கார்த்திக் உடன் மஞ்சிமா மோகன்.. அந்த கேப்சன் தான் ஹைலைட்டே! 😍 CUTE PHOTO!

நடிகை லைலா

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் லைலா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் லைலா இணைந்து நடித்திருக்கிறார். பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, அள்ளித்தந்த வானம், பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் லைலாவின் தனித்துவமான நடிப்பு ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

Actress Laila Post About Manju Character in Pithamagan Movie

Images are subject to © copyright to their respective owners.

ரீ - எண்ட்ரி

தொடர்ச்சியாக படங்களில் நடித்துவந்த லைலா, அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்தார் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சர்தார் படம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து, வதந்தி எனும் வெப் சீரிஸில் லைலா நடித்திருந்தார். இதிலும் இவருடைய கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பிற்கு  ரீ - எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை லைலாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Actress Laila Post About Manju Character in Pithamagan Movie

Images are subject to © copyright to their respective owners.

எமோஷனல் பதிவு

இந்நிலையில், லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிதாமகன் படத்தில் தான் நடித்திருந்த கதாப்பாத்திரம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். மேலும், அதில் பிதாமகன் படத்தின் தொகுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,"மஞ்சு கதாப்பாத்திரம் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் கதாபாத்திரம். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் மஞ்சுவை மீண்டும் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் எண்ணம் இப்படியாகவே இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பேன் என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

பிதாமகன்

பாலா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் பிதாமகன். சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதன் மூலம் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதை விக்ரம் பெற்றார். இந்த படத்தில் மஞ்சு எனும் கதாப்பாத்திரத்தில் லைலாவின் குறும்புத்தனமான நடிப்பு தமிழக மக்களிடையே லைலாவிற்கு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 3வது படத்தில் ரஜினியை இயக்கும் 'ஜெய் பீம்' ஞானவேல்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Laila Post About Manju Character in Pithamagan Movie

People looking for online information on Laila, Pithamagan will find this news story useful.