www.garudabazaar.com

குடும்பத்தை ரெண்டாக்கிய அர்ஜூன்.. கொந்தளித்த கோதை.. எச்சரித்து வெளியேறிய தமிழ்.. Thamizhum Saraswathiyum

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை :  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுள் தமிழும் சரஸ்வதி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Yogi Babu : யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஐகோர்ட் மகாராஜா..!! இயக்குநர் யார் பாருங்க..

சேர்மேன் போட்டி

இதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தங்கை ராகினியை அர்ஜூன் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்த காதலுக்கு மிகவும் சப்போர்ட் பண்ணியது தமிழும் சரஸ்வதியும்தான். இதனால் அவர்கள் மீது ராகினிக்கு மிகுந்த மரியாதை இருந்தது. இந்த நிலைமையில் தமிழின் அம்மா தன் மகன்களான தமிழ், கார்த்திக் மற்றும் மருமகன் அர்ஜூன் மூவருக்கும் தங்கள் குடும்பத்தின் அடுத்த கம்பெனி பொறுப்புக்கான சேர்மன் ஆக ஆகக்கூடிய வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒரு போட்டி வைத்தார்.

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

Images are subject to © copyright to their respective owners.

பழிவாங்கும் அர்ஜூனின் குடும்பம்

இந்த போட்டியில் அதிக புரொடக்ஷன் கிடைத்து, அதிக லாபம் ஈட்டுபவர்தான் அனைத்து நிறுவனங்களுக்கும் அதிபதியாக முடியும். ஆனால் அர்ஜூன் இந்த குடும்பத்தில் சூழ்ச்சியை செய்து வந்தார். அர்ஜுனும் அவரது குடும்பமும் தமிழின் குடும்பத்தை முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில், தமிழின் வீட்டிலேயே தங்கி தமிழின் மனைவி சரஸ்வதியை குழந்தை பாக்கியம் இல்லை என சொல்லி குத்தி காட்டி பேசியது, ராகினிக்கும் தமிழுக்கும் புரிதலின்மையை ஏற்படுத்தியது உள்ளிட்ட வேலைகளை பார்த்து வந்தனர்.

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

Images are subject to © copyright to their respective owners. 

தமிழுக்கு எதிரான அர்ஜூனின் சூழ்ச்சி

இன்னொரு பக்கம் தமிழ் நிறுவனத்தில் வேலை நடக்க விடாமல் அர்ஜுன் தடுக்க பார்த்தார். அப்படி இருந்தும் அர்ஜுனனின் நிறுவனத்தில் மிஷின் ரிப்பேர் ஆனபோது தமிழே சென்று சரி செய்தார். 

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

Images are subject to © copyright to their respective owners. 

கடைசியாக தமிழ் தான் ஜெயிப்பார் என்கிற நிலை வந்ததும் வேறு வழி தெரியாத அர்ஜூன் தன் நிறுவனத்தில் தமிழ் பழுதுபார்த்த மிஷினை மீண்டும் பழுதாக்கி விட்டு அதற்கு காரணம் தமிழ் தான் என்று பழி போட்டார். இதேபோல் ராகினியின் மருத்துவருக்கான டிரெய்னிங்கை அரக்கோணத்தில் நடக்கும்படி தமிழ் தான் மாற்றி அமைத்திருந்தார். இந்த விஷயத்தையும் அர்ஜூன் ராகினி மற்றும் குடும்பத்தினரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்துவிட்டார்.

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

Images are subject to © copyright to their respective owners.

கொந்தளித்த கோதை

இப்படி தமிழுக்கு எதிரான விஷயங்களை வலுவாக்கி விட்ட அர்ஜூன் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே ரௌடிகளை வைத்து கத்தியால் குத்தி கொண்டு தமிழ்தான் தன்னை குத்திவிட்டார் என்று ராகினி முன்னாள் சென்று நாடகம் ஆட, குடும்பத்தினர் அனைவரும் நம்பிவிட்டனர்.

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

Images are subject to © copyright to their respective owners.

இதன் அடுத்த கட்டமாக தமிழின் அம்மா கொதித்து எழுந்து தமிழையும் சரஸ்வதியையும், “இனி உங்களுடனான உறவு முறிந்தது” என்று சொல்லி திட்டினார்.

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

Images are subject to © copyright to their respective owners.

வெளியேறிய தமிழும் சரஸ்வதியும்

இதனால் தமிழ் ஆத்திரமடைந்து, “நீங்கள் ஒரு பாம்பென்று தெரியாமல் அதற்கு பால் வைக்கிறீர்கள். அது ஒருநாள் திருப்பி விஷயத்தை கக்கும்” என்று ஆவேசமாக எச்சரித்து கூறிவிட்டு தன் மனைவி சரஸ்வதியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்படுகிறார். பெரும் திருப்பங்களுடன் கூடிய இந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Also Read | தளபதி கோப்பை T20 போட்டியை துவக்கி வைத்து கிரிக்கெட் ஆடிய அமைசர் உதயநிதி ஸ்டாலின்..!

Thamizhum Saraswathiyum 01 march 2023 episode promo

People looking for online information on Thamizhum Saraswathiyum, Thamizhum Saraswathiyum today episode, Thamizhum Saraswathiyum today promo will find this news story useful.