www.garudabazaar.com

அடடே..😍 சிவாவுக்காக பிரியா ஆனந்த் அனுப்பிய ஸ்பெஷல் சாப்பாடு... Exclusive!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவா. அகில உலக சூப்பர்ஸ்டார் என இவரை ரசிகர்கள் குறிப்பிடும் சூழலில், இவரது நடிப்பில் "சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

Popular actress from leo movie surprise dish to actor shiva

Also Read | "கோலங்கள் 400 எபிசோடில் பண்ணத 'எதிர் நீச்சல்' 150-ல பண்ணிடுச்சு".. - இயக்குனர் திருச்செல்வம் EXCLUSIVE

இந்த திரைப்படத்தில் சிவாவுடன் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கி உள்ளார்.

ஸ்மார்ட் போன் ஒன்றைக் கொண்டு சிவா சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை காமெடியாக இந்த படம் எடுத்துரைப்பது ட்ரைலர் மூலம் தெரிய வந்தது. மேலும், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

Popular actress from leo movie surprise dish to actor shiva

நயன் - விக்கி கல்யாணம்..

இதனிடையே, சமீபத்தில் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்த நடிகர் சிவா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடிக்க விக்னேஷ் தன்னிடம் கதை சொன்னது பற்றியும் பேசி இருந்தார். அதே போல தான் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தால் நயன்தாரா அந்த படத்தில் நடித்திருக்க மாட்டார் என்றும் அப்படி நடந்து இருந்தால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் உருவாகி இருக்காது என்றும் குறிப்பிட்ட சிவா அவர்கள் காதலித்து திருமணம் செய்வதற்கு அந்த படத்தில் நடிக்காமல் போனதுதான் முக்கிய காரணம் என்று ஜாலியாக பதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் Behindwoods நடத்திய "Shiva Fans Festival" நிகழ்ச்சியிலும் நடிகர் சிவா கலந்து கொண்டிருந்தார். தன்னுடைய திரைப்படத்தில் எப்படி மிக ஜாலியாக அனைவரிடமும் இருப்பாரோ அதேபோல இந்த பேட்டியிலும் மிகவும் கலகலப்பாக பல்வேறு விஷயங்களை பற்றியும் பேசி இருந்தார்.

Popular actress from leo movie surprise dish to actor shiva

லியோ பிரபலம் அனுப்பிய உணவு

இந்த பேட்டிக்கு நடுவே நடிகர் சிவாவிற்காக ஸ்பெஷல் ஆக ஒரு நபரின் சார்பில் சமைத்து அனுப்பிய உணவை அங்கே கொண்டு வந்து அவர் முன்னே வைத்திருந்தனர். கொஞ்ச நேரமாக யார் அந்த உணவை தனக்கு கொடுத்துவிட்டு இருப்பார் என்பதை கணிக்க முடியாத சூழலில் சிவா இருந்தார்.

அதே போல, அது என்ன உணவு என்பதை உண்டு பார்த்து கணிப்பதற்கும் சற்று நேரம் எடுத்துக் கொண்டார். "என் வாழ்க்கையில் இப்படி சாப்பிட்டதே இல்லை இது ஸ்வீட்டா, ஏதோ சால்ட்டி ஐட்டமா என்னன்னு தெரியவே இல்லை" என்றும் வேடிக்கையாக தெரிவித்தார்.

Popular actress from leo movie surprise dish to actor shiva

பிரியா ஆனந்த் சர்ப்ரைஸ்..

இறுதியில் குளிரான இடத்தில் இருந்து ஒருவர் கொடுத்து அனுப்பியது என நெறியாளர் சோபனா Clue ஒன்றை கொடுத்தார். அப்போது பிரியா ஆனந்த், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் பெயரையும் சிவா சொல்ல காஷ்மீரில் இருக்கும் நடிகை பிரியா ஆனந்த், நடிகர் சிவாவுக்காக அருகே உள்ள இடத்திலிருந்து சமைக்க சொல்லி ஸ்பெஷலாக ஆர்டர் செய்து அனுப்பியதையும் நெறியாளர் சோபனா விளக்குகிறார். காஷ்மீரில் தற்போது இருப்பதால் அதன் ஞாபகமாக காஷ்மீரி புலாவை நடிகர் சிவாவுக்கு அனுப்பி உள்ளதையும் தெரிவித்தார். அதேபோல இங்கே இருந்து இருந்தால் கண்டிப்பாக அவரே சமைத்துக் கொடுத்திருப்பார் என்றும்  நெறியாளர் சோபனா பிரியா ஆனந்த் சார்பில் தெரிவித்தார்.

நடிகை பிரியா ஆனந்த் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் லியோ படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

Also Read | விஜய் நடிக்கும் LEO.. படத்தில் Bigg Boss அமுதவாணன் நடிக்கிறாரா?.. முழு விவரம்!

அடடே..😍 சிவாவுக்காக பிரியா ஆனந்த் அனுப்பிய ஸ்பெஷல் சாப்பாடு... EXCLUSIVE!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress from leo movie surprise dish to actor shiva

People looking for online information on Leo, Mirchi Shiva, Shiva Exclusive interview will find this news story useful.