‘யாத்தே.. தர்ஷனுக்கு கோவம் வருது..!’ இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு..! - ஷெரினுடன் ஒரு Romantic Walk
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 12, 2019 01:02 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியது முதலே சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில், தற்போது டான் நியாயமான
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட்டுக்கான கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிதாக கலவரம் வெடிக்கவில்லை என்ற நிலையில், இன்றைக்கு வெளியான புரொமோக்களில் இன்றைய எபிசோடில் நிச்சயம் ஒரு தரமான சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோவில் வனிதாவிற்கும், தர்ஷனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 2வது புரொமோவில், அதன் தொடர்ச்சியாக இந்த வாக்குவாதம் பற்றிய விவாதம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே நடைபெற்றது. தர்ஷன் தனது தரப்பு ஆதங்கத்தினை கவின், சாண்டி, ஷெரின், மீராவிடம் கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘கொஞ்சம் வாய்ஸ் ஓங்கினதும் நான் அடங்கி போய்டுவேனு நினைச்சிட்டாங்க.. இதை தான் அவங்க எல்லாருக்கும் செஞ்சிட்டு இருக்காங்க..’ என தர்ஷன் கூறுகிறார். அதற்கு கவின், ‘யாருமே பேசக் கூடாது என்றால் அதுக்கு எதுவுமே பண்ண முடியாது’ என்கிறார்.
‘இல்ல பேசுறது பேசுங்க.. பேசிட்டு வெளியில் வந்துடுங்க என்ற ஷெரின்.. அம்மாடி தர்ஷனுக்கு கோவம் வருதா..? சரி கூல் என் கூட ஒரு வாக் போலாம் வா.. இந்த நேரத்துலயும் ரொமாண்டிக்கா உனக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு’ என்றார் ஷெரின்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பல காதல் கதைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக ஷெரின் - தர்ஷன் இடையே ஒரு மாதிரியான ரொமாண்டிக் டிராக்கை ஓட்ட பிக் பாஸ் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
‘யாத்தே.. தர்ஷனுக்கு கோவம் வருது..!’ இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு..! - ஷெரினுடன் ஒரு ROMANTIC WALK வீடியோ