பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்கள் மனதிலும் சக போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் அடுத்தடுத்து தனது பெயரை தானே கெடுத்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் , பின்னர் சாக்ஷி , லொஸ்லியா என ஒரு பெண்ணையும் விட்டு வைக்காமல் அதனை பேரையும் தனது வலைக்குள் விழவைத்துவிட்டார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் தனது பெயரை இழந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்றைய கொலைகாரன் டாஸ்கில், சாக்ஷி கொலைசெய்யப்பட்டவராக பாவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட சாக்ஷி ஆவியாகி விடுவதால் அவரிடம் யாரும் பேசக்கூடாது என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இந்த நேரத்தில் தான் கவின் வந்து சாக்ஷியின் அருகில் அமர்ந்துகொண்டு நான் எங்கேயும் போகமாட்டேன் இங்கேதான் இருக்கிறேன். எப்போதும் நீ செய்வதெல்லாம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்றெல்லாம் கூறினார்.