''இது காதலா... முதல் காதலா?'' - ஷெரினுக்கு Love அம்பு விடும் தர்ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியா - ஆரவ் காதல் விவகாரங்கள் தான் அந்த சீசனில் ஹாட் டாபிக்காக இருந்தது.

Dharshan Romance with Sherin in Kamal Haasan's Bigg Boss 3 promo

இந்த சீசனிலும் கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக அபிராமி கூற ஆரம்பத்திலேயே பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால் கவின், சாக்ஷி, லொஸ்லியா என அனைவரிடமும் அதே மாதிரி பேசி வருகிறார். இதுகுறித்து கவினிடம், கமல்ஹாசன் கேட்ட போது, 'எனக்கு நிறைய அத்தை பெண்கள் இருக்காங்க. அவங்க கூட விளையாடுற மாதிரி தான், இவங்க கூடவும் பேசிட்டு இருக்கேன்' என்றார்.

ரசிகர்களால் ஆர்மி எல்லாம் உருவாக்கப்பட்ட லொஸ்லியாவிற்கோ யாரிடமும் பெரிதாக ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதனால் இந்த சீசனில் காதல் அத்தியாயங்கள் மட்டும் மிஸ் ஆகிக் கொண்டே இருந்தது.

அதற்கு எல்லாம் சேர்த்து இப்போது ஷெரின் மீது தர்ஷன் காதல் வயப்பட்டதாக தெரிகிறது. விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய புரோமோவில், ''போட்டியாளர்கள் அனைவர் முன்னிலையிலும் பேசும் தர்ஷன், நான் ரொம்ப மிஸ் பன்றது ஷெரின் டார்லிங் தான். ஃபர்ஸ்ட் டே தேவதையா வந்தா ஷெரின். என உருக ஷெரின் வெட்கத்தில் தலை குனிகிறார்.  இது டாஸ்க்கா அல்லது நிஜ காதலா என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தெரிய வரும்'' என்றார்.