'வனிதா சர்ச்சைக்கு சிம்பு என்ன சொன்னார் தெரியுமா?' - ராபர்ட் மாஸ்டர் ஓபன் அப்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3யில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் பாத்திமா பாபு. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Robert Master Speaks about Simbu and Vanitha and Bigg Boss 3

இந்நிலையில் வனிதா அனைவரையும் டாமினேட் செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வனிதா தயாரிப்பில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர் மன்றம் என்ற பெயரில் நடன இயக்குநர் ராபர்ட் ஒரு படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை வனிதா தயாரித்திருந்தார். 

இதனையடுத்து பிக்பாஸில் வனிதாவின் செயல்பாடுகள் குறித்து ராபர்ட் மாஸ்டர் Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில் வனிதாவிற்கும் இவருக்கும் இடையே காதல் என்று வெளியான செய்திகள் பொய்யானவை என்று கூறினார். அப்போது அந்த சர்ச்சை குறித்து சிம்பு என்ன சொன்னார் என்று தொகுப்பாளர் தாரா கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராபர்ட், சிம்பு எனக்கு கால் பண்ணி, எதுக்கு நீ அவங்க கூட படம் பண்ணனும்? தனியாவே பண்ணியிருக்கலாமே ? ஒரு பொண்ணோட சேர்ந்து பண்ணா எப்படியும் கோர்த்து விட்டுருவாங்கடா. அது மட்டும் இல்லாம அவங்க ஏற்கனவே பஞ்சாயத்துல இருக்காங்க'' என்று சொன்னார். அதற்கு நான், அவங்க படம் பண்ணலாம்னு சொன்னாங்க, அது இவ்ளோ பிரச்சனையாகும் என்று எனக்கு தெரியாது என்றேன் எனறு தெரிவித்தார்.

'வனிதா சர்ச்சைக்கு சிம்பு என்ன சொன்னார் தெரியுமா?' - ராபர்ட் மாஸ்டர் ஓபன் அப் வீடியோ