பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு சரவணன், மோகன் வைத்தியா, மதுமிதா, வனிதா, மீரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய கொலைகாரன் டாஸ்கில், சாக்ஷி கொலை செய்யப்பட்டதையடுத்து, அவர் ஆவியாகவிட்டார். ஆவியுடன் யாரும் பேசக் கூடாது என்பது பிக் பாஸ் அறிவித்த ரூல். அதன்படி, சாக்ஷி இறந்து ஆவியாகிவிட அவர் அருகே அமர்ந்து கவின் சோகத்தில் மூழ்கினார்.
அதில், சாக்ஷியின் மறைவை தாங்க முடியாமல் தனது துக்கத்தை பகிர்ந்துக் கொண்ட மதுமிதா, அவரது லவ் ரிலேஷன்ஷிப் பற்றிய உண்மையையும் பேச்சுவாக்கில் லீக் செய்துவிட்டார்.
‘இந்த வீட்ல இருக்க எல்லோரையும் இங்க வந்து தான் பாத்தேன். ஆனா வெளியிலயே சாக்ஷிய எனக்கு தெரியும். என்ன இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு சாட்சி சொல்லாம போனது தான் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. வெளியிலயும் நல்லா நடிப்பா.. வீட்டுக்குள்ள அதைவிட அருமையா நடிப்பா. கவின லவ் பண்ற மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கா.. ஆனா அது நம்ம கவினுக்கே தெரியாது அது தான் உண்மை’ என உண்மையை கூறிவிட்டார் மதுமிதா.
‘வெளிய நல்லா நடிப்பா.. அதை விட வீட்டுக்குள்ள...’ - சாக்ஷியின் LOVE டிராமாவை போட்டு உடைத்த மதுமிதா வீடியோ