என் ஓட்டு இவருக்கு தான்.. What a Man...’ - பிக் பாஸ் எலிமினேஷன் குறித்து ரியோ ட்விட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Gokul | Jul 12, 2019 10:58 AM
பிக்பாஸ் 15 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 23ஆம் தேதி துவங்கியது. பிறகு ஒரு சில நாட்கள் கழித்து மீரா இணைந்து கொண்டார்.
காதல், சோகம், அழுகை என அனைத்தும் நிரம்பி வழியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேறினார்.
மேலும் அடுத்த வாரம் வெளியேற உள்ளவர் லிஸ்ட்டில் பல முகங்கள் உள்ளன. இதனால் தனது விருப்ப போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கவனமாக ஓட்டு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரியோ தான் யாருக்கு ஓட்டு அளித்துள்ளேன் என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளார். அதில், சித்தப்பு சரவணனுக்கே தன்னுடைய 50 ஓட்டுகளையும் போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
All my Votes to #Sithappu
What a Man 💪💪💪#SaveSithappu #BiggBossTamil3 #Biggboss3tamil pic.twitter.com/9lCptw3KtP
— Rio raj (@rio_raj) July 11, 2019
Tags : Rio Raj, Big Boss 3 Tamil, Vijay tv