Bigg Boss 3 Promo : போ நீ போ…. வனிதாவால் பிரிந்த "கவின் - லாஸ்லியா" வீடியோ இதோ !
முகப்பு > சினிமா செய்திகள்By Gokul | Jul 11, 2019 10:03 AM
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார்.

லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் கூறுகின்றார்.
கவினை லாஸ்லியா தவிர்த்து வரும் நிலையில் வேண்டுமென்றே கவினை லாஸ்லியாவுடன் கோர்த்து விட வனிதா சாக்சியை பயன்படுத்தி கொள்கிறார். இதனால் லாஸ்லியா டென்ஷனாகிறார். இதைத்தான் வனிதா எதிர்பார்த்தார், அவர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது
இந்த நிலையில் வனிதாவிடம் காண்பிக்க முடியாத கோபத்தை லாஸ்லியா கவினிடம் காண்பிக்கின்றார். இனிமேல் என்னோட நீ எப்பவுமே பேச வேண்டாம் என்று மனம் வெறுத்து கூறுகின்றார்.
#Day18 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/cktwTxW8BQ
— Vijay Television (@vijaytelevision) July 11, 2019
BIGG BOSS 3 PROMO : போ நீ போ…. வனிதாவால் பிரிந்த "கவின் - லாஸ்லியா" வீடியோ இதோ ! வீடியோ