ரெடியாகும் தளபதி விஜய்யின் பிகில் இன்ட்ரோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 12, 2019 11:10 AM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் Introduction காட்சியின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் இந்திய கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாகிய ஐ.எம் விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து ‘பிகில்’ திரைப்படத்தின் Introduction Fight காட்சி சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்து படத்தின் டீசர், இசை குறித்த தகவல்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.