செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'என்ஜிகே'. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து தண்டல்காரன் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கபிலன் எழுத, கேஜி ரஞ்சித் பாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கே.வி.ஆன்ந்த் இயக்கும் 'காப்பான்' படத்தில் நடித்துமுடித்துள்ள சூர்யா, 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் தற்போது நடித்துவருகிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தண்டல்காரன் - என்ஜிகே படத்திலிருந்து வெளியான முதல் பாடல் இதோ! வீடியோ