சூர்யாவின் உறியடி 2 வில் இருந்து வெளியான வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூகத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், அது கல்லூரி மாணவர்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது குறித்தும் பேசிய படம் 'உறியடி'.  விஜய்குமார் தயாரித்து இயக்கி நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

Iraiva Video song released from Suriya and Vijaykumar's Uriyadi 2 music by Govind Vasantha

அதனைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக உருவான படம் 'உறியடி 2'. இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2டி புரொடக்ஷன் சார்பாக தயாரித்திருந்தார். இந்த படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்த படத்துக்கு 96 படத்தின் மூலம் புகழ்பெற்ற கோவிந்த் வசந்தா இசையமைக்க, பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இந்த படத்திலிருந்து தற்போது இறைவா என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை விஜய்குமார் எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பாடியிருந்தார். இந்த படத்தின் பின்னணி இசையை பாராட்டியதாக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் உறியடி 2 வில் இருந்து வெளியான வீடியோ இதோ வீடியோ