தமிழ் புத்தாண்டிற்கு சூப்பர் சர்ப்ரைஸ் காத்திருக்கு..! சூர்யா ரசிகர்கள் ஹாப்பி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் அல்லது முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Suriya's Kaappaan teaser or first single will be releasing on Tamil New Year

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இயக்குநர் கே.வி.ஆனந்த் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், வரும் தமிழ் புத்தாண்டிற்கு காப்பானிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கலாம் யோசியுங்கள் என ரசிகர்களிடம் கேட்டபடி ட்வீட் செய்துள்ளார். இதனால், ‘காப்பான்’ படத்தின் டீசர் அல்லது முதல் சிங்கிள் டிராக் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இது சூர்யா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கராவின் சூர்யா 38 படத்தின் ஷூட்டிங் பணிகளையும் நடிகர் சூர்யா தொடங்கியுள்ளார்.