'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்பறவைகள்' , 'தர்மதுரை' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களின் மூலம் கவனம் ஈர்த்துவருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது படங்களுக்கு யுவனின் இசையும் மிக பக்கபலமாக அமைந்துள்ளது.

தற்போது இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இவர் அருள்நிதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை டைம் லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார்.
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.