என்.ஜி.கே மியூசிக் அப்டேட்- சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வரும் ஏப்.12ம் தேதி ரிலீசாகிறது.

First Single from Suriya-Selvaraghavan's NGK will be releasing on April 12, Yuvan musical

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வரும் ஏப்.12ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த (பிப்.14) அன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை குவித்தது.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்திற்காகவும், யுவனின் இசைக்காகவும் நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகவுள்ளது. 

அனல் பறக்கும் அரசியல் களத்தில் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.