சூர்யா 38 தாறுமாறு மியூசிக் காம்போ- சூப்பர்ஹிட் மியூசிக் டீமுடன் கைக்கோர்த்த ஜி.வி பிரகாஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி அமைத்துள்ளார்.  

Popular Thaikkudam Bridge Music Band have performed for Suriya 38 in GV Prakash Musical

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

இப்படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே Behindwoods தளத்திடம் அளித்த பிரத்யேக பேட்டியில், சூர்யா-38 ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே இசையை முடித்துவிட்டதாகவும், இதுவரை தன் இசையில் இல்லாத ஒரு விஷயமும், இது தாறுமாறான கூட்டணியாக இருக்கும் எனவும் ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘சூர்யா-38’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலுக்காக தென்னிந்தியாவின் பிரபல மியூசிக் பேண்டான கேரளாவைச் சேர்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ உடன் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி அமைத்துள்ளார். 

இந்த பாடலை தங்களது அதிரிபுதிரி ஸ்டைலில் அசத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு அதிரடி காட்டும் விதமாக இதனை பிரபல இயக்குநரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் பாடல் எழுதியுள்ளார்.

இதையடுத்து இந்த தாறுமாறு கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.