சூர்யா 38 - ஹீரோயின் யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்தின் ஹீரோயின் மற்றும் படக்குழு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Suriya 38- cast and crew has been announced, Aparna Balamurali to play female lead in Surya 38

சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா 38’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் ஆரம்பமாகவுள்ளதது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக ‘சர்வம் தளமயம்’ திரைப்படத்தின் ஹீரோயின் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இப்படம் ஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் பயோபிக் ஆக இப்படம் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி கோபிநாத்தின் ஜாடைகள் அபர்ணா பாலமுரளிக்கு இருப்பதால் அவரை இந்த படத்தின் நாயகியாக தேர்ந்தெடுத்திருக்கலாம் எனவும் தெரிகிறது. எனினும், இப்படம் எதை பற்றியது என்பது குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூர்யா 38 - ஹீரோயின் யார் தெரியுமா? வீடியோ