நடிகர் ஃபஹத் பாசில், நஸ்ரியா நசீம், இயக்குநர் திலீஸ் போத்தன், ஸ்யாம் புஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்து, மது சி. நாராயணன் இயக்கியுள்ள படம் 'கும்பலங்கி நைட்ஸ்'.

இந்த படத்தில் ஃபஹத் பாசில், ஷேன் நிகம், சௌபின் ஷாஹீர், அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு சுஸின் ஸ்யாம் இசையமைக்க ஷைஜு காலிட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கும்பலங்கி எனும் சிற்றூரில் வசிக்கும் சஜி, போனி, பாபி, ஃபிராங்கி ஆகிய நான்கு சகோதரர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வே படத்தின் கதை. இவர்களது வாழ்வை உண்மைக்கு நெருக்கமாகவும் உன்னதமாகவும் பேசியிருக்கிறார் இயக்குநர். இந்த படம் மலையாளம் தாண்டி தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் முக்கிய காட்சிகளும் அது படமாக்கிய விதம் குறித்தும் காட்டப்படுகிறது.
ஃபஹத் பாசிலின் 'கும்பலங்கி நைட்ஸ்' உருவான விதம் இதோ வீடியோ