தளபதி விஜய்யின் "பிகில்" தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! -விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் பட நிறுவனம் கைப்பற்றியது.

Thalapthy Vijay Bigil Telugu rights bagged by East Coast Prdns

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்கள் பிகிலடித்து பிகில் படத்தை கொண்டாடும் தருணம் நெருங்கியுள்ளது. பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி  தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறவிருப்பதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்சன்ஸ் சார்பில் மஹேஷ் எஸ்.கோனேரு  கைப்பற்றி உள்ளதாகவும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிட முடிவு செய்துள்ளதாகவும், இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.