விஜய் சேதுபதியின் சங்கத்தமிழனின் தெறிக்கும் இசை எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் 'சங்கத் தமிழன்'. இந்த படத்தை 'வாலு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ளார்.

Vijay Sethupathi's Sangathamizhan audio out on September 17

விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.