பிக் பாஸ் சிறப்பு விருந்தினராக..! - கருத்துக் கேட்கும் முன்னாள் பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன்.  இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை போராடி இரண்டாம் இடத்தை பிடித்தார்.

Snehan Tweet About Bigg Boss 3 Tamil Vijay tv hotstar

இந்நிலையில் சினேகன் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பொம்மி வீரன். உழவன் திரைக்களம் தயாரித்துள்ள இந்த படத்தை ரமேஷ் மகாராஜன் இயக்கி வருகிறார். தாஜ் நூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சினேகன்