இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் பிக் ஷாட்ஸ்..!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 09, 2019 05:23 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து, போட்டிகள் கடுமையாகி வருகிறது.

இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் இரண்டு புரொமோ வீடியோக்களில் இந்த வாரத்துக்கான கேப்டன்ஸி டாஸ்க் பற்றிய விஷயங்களும், விவாதங்களும் இடம்பெற்றிருந்தன. கேப்டன் பதிவிக்கான போட்டியில் தர்ஷன், லாஸ்லியா, வனிதா ஆகியோர் பங்கேற்ற நிலையில், வனிதா மற்றும் தர்ஷன் ஆகியோர் விட்டுக் கொடுக்க லாஸ்லியா டாஸ்கை வென்றது போல் புரொமோவில் இடம்பெற்றிருந்தது.
தற்போது, அதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள கடைசி புரொமோ வீடியோவில், இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸும் தொடங்கியது. பாய்ஸ் டீமான தர்ஷன், சாண்டி, முகென் ராவ் ஆகியோர் அடுத்தடுத்து சொல்லி வைத்தது போல் வனிதாவை நாமினேட் செய்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வனிதா, இந்த வீட்டில் தர்ஷன் வரும் வாரங்களில் நாமினேஷனில் வருவாரா என்பது சந்தேகம் தான் என்றும், இந்த வீட்டில் அனைவரும் Dirty அரசியல் செய்து விளையாடி வருவதாகவும் வனிதா குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த வனிதா, மீண்டும் வெளியேற்றப்படுவாரா அல்லது, பிக் பாஸ் ஸ்டைலில் எதிர்பார்க்காததை எதிர்ப்பார்ப்போமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த பிக் பாஸ் வீட்டின் பிக் ஷாட்ஸ்..! வீடியோ