''இதையே Maintain பண்ணிக்கடா'' - 'பிகில்' ஷூட்டிங்கில் இந்த பிரபலத்தை வாழ்த்திய தளபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

Singer Poovaiyar speaks about Thalapathy Vijay and Bigil

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நடித்து வரும் இந்த படத்தில் தளபதி விஜய் அப்பா -மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற இந்த படத்தில் சிங்கப் பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதில் வெறித்தனம் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். இந்த பாடலில் தளபதி விஜய்யுடன் இணைந்து பூவையார் என்ற சிறுவன் பாடியுள்ளான்.

மேலும் வெறித்தனம் பாடலில் விஜய்யுடன் நடனமாடியுள்ளான்.  இதனையடுத்து பிகில் அனுபவம் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வெறித்தனம் பாட்டோட ஷூட்டிங் அப்போ யோகி பாபு அண்ணன் கூட உட்காந்து பேசிட்டு இருந்தேன்.

அப்போ தான் தளபதி அண்ணன் வந்தாரு. டேக்கு அப்புறம் போயிட்டே இருக்காரு. அவ்ளோ தான். என்கிட்ட இதலாம் யாருடா உனக்கு கத்து தரானு கேட்டார்.  அதுக்கு நான் எல்லாம் அவன் செயல்னானு சொன்னேன். இதையே மெயின்டெய்ன் பண்ணிக்கடானு சொன்னார்.

''இதையே MAINTAIN பண்ணிக்கடா'' - 'பிகில்' ஷூட்டிங்கில் இந்த பிரபலத்தை வாழ்த்திய தளபதி வீடியோ