www.garudabazaar.com

தளபதி65.. டைட்டிலுடன் தளபதி விஜய் வெளியிட்ட வெறித்தனமான FirstLook!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி65 படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பட்ட்டையை கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Thalapathy65 Beast first look movie vijay nelson birthday

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்துக்கு ஆங்கிலத்தில் BEAST (பீஸ்ட்) என பெயரிடப்பட்டுள்ளது.

Thalapathy65 Beast first look movie vijay nelson birthday

ஜூன் 22 நடிகர் விஜயின் பிறந்தநாள் மற்றும் ஜூன் 21 ஆன இன்று இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்த நாள். இந்நிலையில் விஜயின் பிறந்த நாளை இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய் நீளமான துப்பாக்கியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலான இந்த படத்தின் போஸ்டரை வடிவமைத்த கோபி பிரசன்னா, தனக்கு இது 75வது திரைப்படம் என்றும் தளபதி விஜயுடன் இது தனக்கு 7வது திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Thalapathy65 Beast first look movie vijay nelson birthday

People looking for online information on Actorvijay Nelsondilpkumar anirudh poojahegde Breaking BEASTFirstLook Thalapathy65FirstLook, Beast, Thalapathy65 will find this news story useful.