www.garudabazaar.com

Video: என்ன நண்பா?.. First Look-ஆ?.. விஜயின் தளபதி65.. வெளியான மரண மாஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் - என்பது ஒரு வார்த்தையாக மட்டுமல்ல, பல ரசிகர்களுக்கு ஒரு உணர்வாகவே இருக்கிறது.

Thalapathy65 mass first look update sun pictures nelson anirudh

ஆம், தளபதி விஜய் ரசிகர்களுக்கு வந்தாச்சு அடுத்த ட்ரீட். ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாள் வேகமாக நெருங்கி வருவதால், உற்சாகங்கள், கவுண்டவுன் மற்றும் டிஜிட்டல் கொண்டாட்டங்கள் என ஆஃப் பீட் மோடில் இப்போதில் இருந்தே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பின் நெல்சன் திலிப்குமார் இயக்கும், தளபதி65 படத்தில் விஜய், பூஜா ஹெக்டேவை திரையில் காண ரசிகர்களால் ஏற்கனவே காத்திருக்க முடியவில்லை. குறிப்பாக ஒரு குறுகிய இடைவெளிக்கு பிறகு பூஜா ஹெக்டேவுக்கும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

Thalapathy65 mass first look update sun pictures nelson anirudh

அனிருத் இசையில் உருவாகும் தளபதி65 படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், தளபதி65 படத்தின் பிரம்மாண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 22 ஆம் தேதியான விஜயின் பிறந்த நாள் அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ள சன் பிக்சர்ஸ், இதனை, “என்ன நண்பா? First look -ஆ” என வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளது.

ALSO READ: வாவ்.. செம்ம!! அல்போன்ஸ் புத்திரனின் விருப்பத்துக்கு.. பேஸ்புக்கில் கமல்ஹாசன் சொன்ன பதில்!

Thalapathy65 mass first look update sun pictures nelson anirudh

People looking for online information on Anirudh, Nelson Dilipkumar, Sun pictures, Thalapathy65, ThalapathyVijay will find this news story useful.