www.garudabazaar.com

தளபதி-ஐ அழைக்கும் தளபதி? .. விஜய் பிறந்த நாளுக்கிடையே பிரபல சர்ச்சை போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் திருமலை திரைப்படத்துக்கு பிறகு அடுத்தடுத்து ஹிட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். கதை தேர்வு, தன்னுடைய கதாபாத்திரத்தில் புதுமை என விஜய் தற்போது வரை நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே வேற லெவல் என்று சொல்லலாம்.

amid Thalapathy Birthday Stalin calls vijay viral poster

அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. மாளவிகா மோகனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய், டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து தளபதி65 படத்துக்கு தயாரானார்.

amid Thalapathy Birthday Stalin calls vijay viral poster

தளபதி65 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், ஜூன் 22ஆம் தேதி வரும் தளபதி விஜயின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ரசிகர்களும் இன்னொருபுறம் தயாராகி வந்தனர். இதனை ஒட்டி தளபதி விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான புது ஆல்பம் பாடல்களை ரசிகர்கள் அடுத்தடுத்து இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் தான் திண்டுக்கல் மணிக்கூண்டு இளைஞரணி தளபதி விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் ஸ்டாலினையும் விஜயையும் இணைத்து, வடிவமைத்து ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

amid Thalapathy Birthday Stalin calls vijay viral poster

குறிப்பிட்ட அந்த போஸ்டரில் அரசியலில் தளபதி என்று அழைக்கப்படும் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செங்கோல் ஒன்றை நடிகர் விஜயிடம் கொடுப்பது போல் சித்தரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரின் இன்னொரு பக்கம் போஸ்டர் அடித்தவர்கள் பெயர், புகைப்படங்கள், விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

amid Thalapathy Birthday Stalin calls vijay viral poster

அந்த போஸ்டரில் பெரிய எழுத்துகளில், “ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சி வழங்கிட தம்பி வா .. தலைமை ஏற்க வா!” என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனை கண்டு திமுக தரப்பினரும் சரி, விஜயின் உண்மையான ரசிகர்களும் சரி, அதிர்ச்சியில் தான் ஆழ்ந்துள்ளனர். தளபதி விஜய் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் இப்படியான போஸ்டர் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் உருவாக்கியிருக்கிறது. எனினும் இதன் பின்னணி குறித்த விபரங்கள் முழுமையாக விளக்கப்படவில்லை.

amid Thalapathy Birthday Stalin calls vijay viral poster

தளபதி65 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி66 திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் தகவலும் ஏற்கனவே உறுதியாகியிருந்தது. இயக்குநர் வம்சி பைடிபல்லி,  கார்த்திக் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் இயக்குநராக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "நாங்க Relationship-ல இல்ல, Morphed Videos-அ நம்பாதீங்க..." - அஸ்வின், சிவாங்கி விளக்கம்!

தளபதி-ஐ அழைக்கும் தளபதி? .. விஜய் பிறந்த நாளுக்கிடையே பிரபல சர்ச்சை போஸ்டர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

amid Thalapathy Birthday Stalin calls vijay viral poster

People looking for online information on Actor Vijay, DMK, MKStalin, Thalapathy65, Thalapathybirthday, ThalapathyVijay, Vijay fans, VijayBirthday will find this news story useful.