Reliable Software
www.garudabazaar.com

மஜா பா.. மஜா பா.. ஜார்ஜியாவில் தளபதி.. ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக பரவும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் தளபதி65 திரைப்படத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Vijay in Georgia Thalapathy65 shoot viral pic தளபதி65 விஜய்

இதில் தற்போது ஜார்ஜியா படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யின் புகைப்படம் வைரலாகி வருகிறது.  மாஸ்டர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 65.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த தளபதி65 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அண்மையில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே இணைவதாக  அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தின் பூஜையும் நடந்தது.

இந்த பூஜையில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இந்த பூஜையில் நடிகர் கவினும் பங்கேற்று இருந்தார். ஆனால் கவின் இந்த படத்தின் உரையாடல் பகுதியில் பங்கு கொண்டிருந்தார் என்கிற தகவல் பின்னர் வெளியானது. இதனைத்தொடர்ந்து அண்மையில் தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் தனது சைக்கிளில் சென்று வாக்களித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. வாக்களித்த கையோடு அன்று இரவே ஜார்ஜியா புறப்பட்ட நடிகர் விஜய் தளபதி65 படப்பிடிப்பில் 16 நாட்கள் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

அதன்படி விஜய், ஜார்ஜியாவில் தளபதி65 படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ: ‘டி ஷர்ட்ட கவனிச்சீங்களா?’ .. கர்ணனுக்கும் தளபதிக்கும் இப்படி ஒரு Link இருக்கா? .. வைரல் ஆகும் Pic!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay in Georgia Thalapathy65 shoot viral pic தளபதி65 விஜய்

People looking for online information on Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Thalapathy65, Trending, Vijay, Viral will find this news story useful.