www.garudabazaar.com

2-ஆம் கட்ட ஷூட்.. அதுவும் சென்னையில.. 'தளபதி65' பட பாடல் பற்றிய மாஸ் அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2020 டிசம்பரில், அதில் தளபதி விஜய் முதல் முறையாக நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து அடுத்த நடிக்கும் தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது.

big breaking Vijay thalapathy65 second schedule mass update

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த படத்தின் அறிவிப்பு ஒரு மரண மாஸ் வீடியோவுடன் வந்தது. இந்த அறிவிப்பே ரசிகர்களிடத்தில் உற்சாகத்தைக் கொடுத்தது. எனினும் இந்த படத்தின் நாயகி யாரென்ற ஆர்வம் பலருக்கும் தொற்றிக்கொண்டது.

பின்னர் தான் இந்த படத்தில் தளபதியுடன் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக இணைவதாக அறிவிப்புகள் வெளியாகி அதகளப்படுத்தின. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுவார் என்றும் தளபதி 65 ஒரு பான் இந்தியா திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இப்போது, ​​ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடர்பான செம்ம அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி  ஜூலை 1 முதல் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவிருப்பதாக நமக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்த 2வது கட்ட படப்பிடிப்பு ஒரு பாடலுக்கான படப்பிடிப்பாக தொடங்கப்படும் என்றும் தற்போது அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: "ராக்கிங் STR.. Woeww எஸ்.ஜே.சூர்யா Sir..".. மாநாடு டப்பிங் முடிந்து நடிகரின் மாஸ் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

big breaking Vijay thalapathy65 second schedule mass update

People looking for online information on Anirudh Ravichander, Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Thalapathy65, ThalapathyVijay, Vijay will find this news story useful.