www.garudabazaar.com

Video: "நாங்க Relationship-ல இல்ல, Morphed Videos-அ நம்பாதீங்க..." - அஸ்வின், சிவாங்கி விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழ் மற்றும் அஸ்வின் என பலரையும் நமக்கு பிடித்துப் போனது.

Ashwin and Sivaangi clarification over morphing pics video

இதில் குறிப்பாக சிவாங்கி மற்றும் அஸ்வின் காம்போ அனைவருக்கும் ரசிக்கும்படியான ஒரு காம்போவாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் சேர்ந்து ரசிகர்கள் அஸாங்கி என்கிற வார்த்தையை உருவாக்கி தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து மார்ஃபிங் செய்யப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்களுடன் கூடிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இது பற்றி அஸ்வின் மற்றும் சிவாங்கி ஆகியோர் தனித்தனியாக தங்களுடைய சமூக வலைதளங்களில் விளக்கமளித்தனர்.

அஸ்வின் கூறும்போது, “அந்த Morph  பண்ணப்பட்ட வீடியோக்களை, புகைப்படங்களை நானும் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது முழுக்க முழுக்க பொய்யான தகவலாக இருந்தது. இதெல்லாம் என்னுடைய புகழை சீர்குலைக்கும் வகையில் இருந்தது. இப்போது வரை நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னுடன் சேர்த்து வதந்திக்கு உள்ளாகியிருக்கும் என்னுடைய அந்த கோ-ஸ்டாருக்கும் எனக்கும் ரிலேஷன்ஷிப் இல்லை.

என்னுடைய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. அவர்கள் தான் என்னுடைய தூணாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எப்போதும் என்னுடன் தொடர்ந்து ஆதரவளித்து இருங்கள். இதுபோன்று தேவையில்லாதவற்றை ஆதரிக்காதீர்கள். ஒரு நபரை பற்றிய இப்படியான தனிப்பட்ட விபரங்கள் அவரை காயப்படுத்தும். எனவே இவற்றை தவிருங்கள் நான் என் கரியரில் தொடக்க கட்டத்தில் இருக்கிறேன். நான் முழுக்க முழுக்க அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். நன்றி லவ் யூ ஆல்!” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், இதுபற்றி விளக்கம் அளித்த சிவாங்கி, “எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நானும் பார்த்தேன். என்னைப் பற்றியும் என்னுடைய கோ- ஸ்டார் பற்றியும் சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. நான் சிரம் தாழ்ந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இப்படியான புகைப்படத்தையும் வீடியோக்களையும் பகிராதீர்கள். இது முழுக்க முழுக்க தவறான தகவல். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே அஸ்வின் திரைப்படத்தில் ஹீரோவாகவும், சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான், உதயநிதி ஸ்டாலினின் ஆர்டிகள் 15 தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றனர்.

VIDEO: "நாங்க RELATIONSHIP-ல இல்ல, MORPHED VIDEOS-அ நம்பாதீங்க..." - அஸ்வின், சிவாங்கி விளக்கம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ashwin and Sivaangi clarification over morphing pics video

People looking for online information on Ashwin, Sivaangi will find this news story useful.