Reliable Software
www.garudabazaar.com

'வெறித்தனம்!'.. தளபதி65 சென்னை ஷூட்க்காக.. 'இப்படி ஒரு முயற்சியா?'.. தெரிஞ்சா அசந்துருவீங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பெரு வெற்றி பெற்றதை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி65.

Thalapathy65 vijay crew chennai shoot massive set update

இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கிய பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்துகான ஷூட்டிங்கிற்காக தளபதி விஜய் சட்டமன்ற தேர்தல் முடிந்த அன்றே ஜார்ஜியாவுக்கு சென்றிருந்தார். அங்கு விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வந்தன.

இதனிடையே இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே இணைவதாக அறிவிக்கப்பட்டார். தெலுங்கில் ராம்சரணுடன் ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாக்களில் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறார்.  முன்னதாக தளபதி65 படத்துக்கான பூஜை சென்னையில் நடந்தது.

இந்த சூழலில் தான் தளபதி விஜயின் தளபதி65 பட ஷூட்டிங் சென்னையில் நடப்பதாகவும் அதற்காக பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் பரவின. குறிப்பாக இந்த ஷாப்பிங் மால் செட்டை அயல்நாட்டு ஷாப்பிங் மாலுக்கு இணையாக அமைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே இந்த தகவல் பற்றி நாம் தொடர்பு கொண்டு தளபதி65 வட்டாரத்தில் விசாரித்தபோது, தகவல் உண்மைதான் என்றும், சென்னை எம்.ஆர்.சி நகரில், அதாவது ஹோட்டல் லீலா பேலஸ்க்கு அடுத்து இந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்படுவதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.  கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம்ம விஷூவல் ட்ரீட் இருக்கிறது.

ALSO READ:விஜய் நடிக்கும் 'தளபதி65-ல்' புதிதாக இணையும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy65 vijay crew chennai shoot massive set update

People looking for online information on Anirudh Ravichander, Nelson Dilipkumar, Sun pictures, Thalapathy Vijay, Thalapathy65, Vijay will find this news story useful.