'பிகில்' இசை வெளியீட்டு விழா தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு தரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Thalapathy Vijay, Nayanthara, AR Rahman's Bigil audio from Sept 19

அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே, விஜய் பாடிய வெறித்தனம் போன்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19 ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே நாம் தகவல் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அப்டேட்டுக்காக காத்திருப்பேன். இசை வெளியீட்டு விழாவான அந்நாளில் தளபதியின் பேச்சை கேட்பதற்காக ஆவலாக இருப்பேன். இந்த முறை அந்த அறிவிப்பை நானே வெளியிடுவேன் என்னால் நம்ப முடியவில்லை. கனவு மெய்ப்பட்டது. பிகில் இசை வெளியீடு 19/9/19 அன்று வெளியாகவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.