'ஹரிதாஸ்' இயக்குநருடன் அருண் விஜய் இணையும் படம் ஆரம்பம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

Arun Vijay’s next with GNR Kumaravelan AV 30 launched

‘ஹரிதாஸ்’ திரைப்படத்தை இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் AV 30 என்ற திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கனவே ‘குற்றம் 23’ திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜையில் இயக்குநர்கள் அறிவழகன், கார்த்திக் நரேன், நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் குமாரவேலன் கூறுகையில், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. அருண் விஜய் போன்ற நடிகருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளது. தற்போது சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சனையை முன்வைத்து க்ரைம் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகிறது.

போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரமான தோற்றம் கொண்டவர் அருண் விஜய், ஏற்கனவே குற்றம் 23 திரைப்படத்தில் அவர் அதனை நிரூபித்திருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வானி ஒப்பந்தமாகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’, ‘சகா’ திரைப்படங்களுக்கு இசையமைத்த ஷபீர் இசையமைக்கிறார், அருண் விஜய்யின் ‘தடம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கோபி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் ஸில்வா ஆக்ஷன் காட்சிகள் வடிவமைக்கிறார்.