www.garudabazaar.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் இவரா.? தெறி அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

TG Gnanavel signed Lyca to direct Rajinikanth deets

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LOVE TODAY : ரூ.100 கோடி வசூல்.. "நான் ஹீரோவா நடிச்சா கலாய்ப்பாங்க.." - பிரதீப்பின் அடுத்த மாஸ் Speech..!  

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 'அண்ணாத்த' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், ஷிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

TG Gnanavel signed Lyca to direct Rajinikanth deets

Images are subject to © copyright to their respective owners.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ. ஞானவேல் தனது அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TG Gnanavel signed Lyca to direct Rajinikanth deets

Images are subject to © copyright to their respective owners.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய்பீம். ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் கடந்தாண்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்  தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து த.செ.ஞானவேல் படம் இயக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 1000 கோடி வசூலை நெருங்கும் 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் படைத்த மெகா சாதனை!

தொடர்புடைய இணைப்புகள்

TG Gnanavel signed Lyca to direct Rajinikanth deets

People looking for online information on Lyca, Rajinikanth, T G Gnanavel will find this news story useful.