www.garudabazaar.com
iTechUS

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ஜெயிலர் பட பிரபலம்.. வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

Jailer Stun Siva meet super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சகோதரிகள்".. மகளுடன் குஷ்பு இருக்கும் PHOTO-க்கு நடிகை அதிதி ராவ் & DD போட்ட வைரல் கமெண்ட்!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

Jailer Stun Siva meet super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Jailer Stun Siva meet super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஜெயிலர் படத்தின் தற்போதைய படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்று வருகிறது.

Jailer Stun Siva meet super Star Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டன் சிவா தனது மகன்கள் கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமாருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | மாஸா சண்டை செய்றாங்களே.. Suriya 42 நாயகி திஷா பட்டானி பகிர்ந்த தெறி வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Jailer Stun Siva meet super Star Rajinikanth

People looking for online information on Jailer, Rajinikanth, Stun Siva, Stun Siva meet super Star Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.