www.garudabazaar.com

சூப்பர் ஹிட் கல்யாண பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய நடிகைகள் மீனா & சங்கவி.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா, & நடிகை சங்கவி இருவரும் இணைந்து பிரபல சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Meena Dancing for Enemy Movie Tum Tum Marriage Song

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அடிபொலி.!! 'பிரேமம்' அனுபமாவின் தமிழ் பாட்டு.. டக்குனு VTK ஹீரோயின் போட்ட கமெண்ட்..!

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும்  ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து மீனா நடித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில்  தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை மீனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பண்டிகையை பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் கொண்டாடிய வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை மீனா & நடிகை சங்கவி இருவரும் இணைந்து எனிமி படத்தில் தமன் இசையில் இடம்பெற்ற டும் டும் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இதே வீடியோவை வெளியிட்டு நடிகை சங்கவி "என்னுடைய பெஸ்ட்டியுடன் முதல் ரீல்" என பதிவிட்டுள்ளார். மைசூரை சேர்ந்த நடிகை சங்கவி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் குமாரின் அமராவதி படத்தின் மூலம் சங்கவி பிரபலமானவர். பின்னர் நடிகர் விஜய்யின் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Also Read | 1000 கோடி வசூலை நெருங்கும் 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் படைத்த மெகா சாதனை!

தொடர்புடைய இணைப்புகள்

Meena Dancing for Enemy Movie Tum Tum Marriage Song

People looking for online information on Enemy Tamil, Meena, Tum Tum Marriage Song will find this news story useful.